பிரதமர் மோடியை சந்தித்த சூப்பர் ஹிட் படத்தின் குழுவினர்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற பாலிவுட் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் வசூல் ஆரம்பகட்டத்தில் மிகவும் குறைவாக இருந்தது என்பதும் இந்தியா முழுவதும் 630 திரையரங்குகளில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டே நாட்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி முதல் இந்த படம் இந்தியா முழுவதும் 2000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டுமென பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பதும் அதன் காரணமாக சொந்த நாட்டிலேயே இந்து மதத்தைச் சேர்ந்த காஷ்மீரிகள் வெவ்வேறு மாநிலங்களில் அகதிகளாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை வைத்து விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி என்பவர் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தனர் என்பதும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com