ஜெயம் ரவியுடன் சூப்பர்ஹிட் பட நாயகி: JR30 படத்தின் பூஜை புகைப்படங்கள்!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30வது படம் குறித்த தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக கசிந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக நடிக்க சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய வெற்றி படங்களில் நடித்த பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தின் நாயகி பிரியங்கா மோகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் முப்பதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகனும், மற்றொரு முக்கிய வேடத்தில் நட்டி நட்ராஜ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

எம் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றதை அடுத்து பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.