கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’ . தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி புஷ்பா பட வில்லன் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபல இயக்குனர் விஜய்மில்டன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் விஜய்மில்டன் ஏற்கனவே பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ’கோலிசோடா’, ‘10 எண்றதுக்குள்ள’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com