சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதல்முறையாக ‘புதுவசந்தம்’ என்ற படத்தை தயாரித்தது. விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்த படம் சூப்பர்ஹிட் வெற்றி பெறவே அதன் பின்னர் சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ஆனந்தம், திருப்பாச்சி, ஜில்லா உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தது.

இந்த நிலையில் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது திரைப்படமாக 'களத்தில் சந்திப்போம்' என்ற படம் தயாராகி வருகிறது என்பதும், இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதிரடி அரசியல் மற்றும் ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை என் ராஜசேகர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

கடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா? நரியா? 'மாஃபியா' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் அடுத்த படம் 'மாஃபியா'.

 ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

பிரபல நடிகைகளான  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கன்வே தெரிந்ததே.

வேற வழியில்ல குருநாதா! சாண்டி நாமினேட் செய்த இருவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடந்து வருகிறது. இதுவரை மோசமாக விளையாடியவர்களை நாமினேஷன் செய்த போட்டியாளர்கள் தற்போது இறுதிக்கட்டத்தில்

கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு.

கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்

மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.