புலி, பாம்பு, தேன்: விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸின்' சூப்பர் டிரைலர்

  • IndiaGlitz, [Friday,February 22 2019]

விஜய்சேதுபதியின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'ஆரண்ய காண்டம்' என்ற தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் விஜய்சேதுபதி இணைந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கான எதிர்பார்ப்பை சொல்லவும் வேண்டுமா? அதிலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் விஜய்சேதுபதி முதல்முறையாக திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் சூப்பர் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

புலி, மலைப்பாம்பு, பள்ளம், தேன் கதையை திரும்ப திரும்ப சொன்னாலும் அந்த குரல் மாடுலேஷனில் விஜய்சேதுபதி காட்டிய வேக வித்தியாசம் டிரைலரை பார்க்கும்போது சிலிர்க்கின்றது. விஜய்சேதுபதி சொல்லும் கதையை அப்படியே கற்பனை செய்து பார்த்தால் ஒருகணம் மனம் திடுக்கிடுகிறது. இதுதான் இந்த படத்தின் வெற்றியாக இருக்கும்

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின் காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் ஒரு விறுவிறுப்பான த்ரில் படம் என்பது மட்டும் இந்த டிரைலரில் இருந்து தெரிகிறது.
 

More News

12வது ஐபிஎல் தொடக்க விழா கேன்சல்! ஏன் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி 12வது ஐபிஎல் தொடங்கவுள்ளது.

கமலும் ஸ்டாலினும் அடித்து கொள்வதை பார்த்து சிரிக்கின்றோம்: சீமான்

கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று கிராம சபை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்

பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்!

பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை

தண்ணீரை விட தன்மானம் முக்கியம்: ரஜினியை விமர்சித்த கமல் கட்சி நடிகை

ரஜினியும் கமலும் நாற்பதாண்டு நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக ரஜினி மீது கமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே

விஜயகாந்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்! கூட்டணியில் திருப்பமா?

அதிமுக கூட்டணியில்  பாமக மற்றும் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிட்ட நிலையில் தற்போது ஒருசில சிறிய கட்சிகளுடன் இரு அணி தலைவர்களும் அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை