'சூப்பர் டீலக்ஸ்' குறித்து சமந்தாவின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 20 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக இணைந்து சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட்லுக் நாளை வெளியாகவிருப்பதாக சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். திருமணத்திற்கு பின் சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்', 'இரும்புத்திரை', 'சீமராஜா' ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படமும் அவரது வெற்றிப்பட பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்த இந்த படத்தை 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளர. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும்.
 

More News

அஜித்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் 50வது நாளை நோக்கி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

சீமானுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்-தயாரிப்பாளர்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் விஜய்யின் 'சர்கார்' படத்துடன் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே

உலகிலேயே இவர்தான் மோசமானவர்: பிரபல இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில்

அரசியல் கூட்டணியால் 'கண்ணே கலைமானே' காட்சி ரத்து!

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் முதலிடம் பெற்ற சன்னிலியோன்!

பீகார் மாநில அரசு நடத்திய ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் சன்னிலியோன் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 98.5% ஆகும்.