சமந்தா கேரக்டருக்காக வெளியான டீசர்

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

பொதுவாக ஒரு படத்தின் டீசர் என்றாலே அதில் நாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே இருப்பது கோலிவுட் திரையுலகில் வழக்கம். ஆனால் விஜய்சேதுபதியுடன் முதல்முதலாக இணைந்து நடிக்கும் சமந்தாவின் கேரக்டரை அறிமுகம் செய்வதற்காக படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் சமந்தா, வேம்பு என்ற கேரக்டரில் நடித்து வருவதாக நேற்று ஒரு டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் சமந்தா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டரான ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரை அறிமுகம் செய்ய ஒரு டீசர் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவில், இயக்குநர்கள் மிஷ்கின் - நலன் குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசல், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், நதியா, காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர்.