close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, October 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த உற்சாகத்தோடு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. அதுதான் விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, 'ஒரு வழியா, கடைசில, செம்மயா, சூப்பரா எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் தியாகராஜன் குமாரராஜாவோட 'சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஃபர்ஸ்ட்லுக் வர்ற அக்டோபர் 8ல் ரிலீஸ் ஆகுது' என கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment