இந்தியில் ரீமேக் ஆகும் 'சூப்பர் டீலக்ஸ்': ஷில்பா கேரக்டரில் யார்?

  • IndiaGlitz, [Thursday,April 25 2019]

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் பெரும்பாலானோர்களில் பாசிட்டிவ் விமரசனத்தையும் ஒருசிலரின் கலவையான விமர்சனத்தையும் பெற்றது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது

இந்த படத்தை பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து தள்ளினார். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் அனைத்து கேரக்டர்களும் முக்கியமான கேரக்டர்களாக இருந்தாலும் விஜய்சேதுபதி நடித்திருந்த ஷில்பா கேரக்டர் சவால் நிறைந்த கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் இந்தியில் நடிக்க போவது யார்? என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
 

More News

மாம்பழ பிரியர்களே உஷார்... சோதனையில் சிக்கிய 350 கிலோ கார்பைடு பழங்கள்!

மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த மாம்பழங்களை கடைகளில் வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்...

கலர், எடைக்கு ஏற்ப விலை: ஜோராக நடக்கும் குழந்தை வியாபாரம்

கலர், எடை பார்த்து குழந்தைகளை வாங்கி, விற்று வரும் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜாவா தீவில் 'காப்பான்' படப்பிடிப்பு! அட்டகாசமான புகைப்படம் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக

கோமதியை அடுத்து சித்ரா பெற்றுத்தந்த தங்கம்: பிரபல நடிகர் வாழ்த்து!

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில்

தங்கமங்கை கோமதிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கும் காமெடி நடிகர்!

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தின் திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.