இப்படியே இருங்க, மாறாதீங்க: சூப்பர்டீலக்ஸ் நடிகரின் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த படங்களில் ஒன்றான ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அஸ்வந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விஜய் சேதுபதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் போது நடந்த ஒரு மலரும் நினைவு நிகழ்ச்சி ஒன்றையும் ஞாபகப்படுத்தினார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை பார்க்க வந்திருந்தனர். அதில் ஒரு பெண் ’இன்று எங்கள் வீட்டில் மீன் குழம்பு வைத்து இருக்கின்றோம் சாப்பிடுகிறீர்களா” என்று கேட்டபோது உடனே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டீர்கள்.
அதன் பின்னர் மறுநாள் ஒரு காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் இயக்குனரின் அனுமதி பெற்று விட்டு நேராக மீன் குழம்பு கொடுத்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நன்றி கூறிவிட்டு தான் படப்பிடிப்புக்கு வந்தீர்கள். உங்களுடைய இந்த செயல் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. இப்படியே இருங்கள், தயவுசெய்து மாறாதீர்கள், என்று அஸ்வந்த் தனது பிறந்தநாள் வாழ்த்து வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Happy birthday @VijaySethuOffl sir. love you so much ??????#SuperDeluxe #Rasukutty #Ashwanth pic.twitter.com/U3X9UFU4i2
— Ashwanth Ashokkumar (@actorashwanth) January 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments