சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2 படங்கள்: உறுதி செய்த தயாரிப்பாளரின் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஒரு திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபிச்சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாகவும் இன்னொரு படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகள் எதுவும் ரஜினி தரப்பிலிருந்தோ அல்லது லைகா தரப்பில் இருந்தோ உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், துணை தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தமிழ்குமரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த இரண்டு திரைப்படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் நபர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout