அபுதாபி சென்ற ரஜினிகாந்த் லூலு குழும நிறுவனரை சந்தித்தாரா? என்ன காரணம்? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபுதாபி சென்றதாக தகவல் வெளியான நிலையில் அங்கு லூலு குழுமத்தின் நிறுவனரை சந்தித்து அவருடன் காரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து அவர் ஓய்வெடுப்பதற்காக அபுதாபி சென்றதாக கூறப்பட்ட நிலையில் அபுதாபியில் அவர் லூலு குழுமத்தின் தலைவரை சந்தித்துள்ளதாக தெரிகிறது

லூலு குழுமத்தின் நிறுவன தலைவர் யூசுப் அலி என்பவர் தனது வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரில் சூப்பர் ஸ்டாரை அருகில் அமர வைத்து அவரே அந்த காரை ஓட்டி சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் லூலு மால் வைத்திருக்கும் யூசுப் அலி ரஜினிகாந்த் உடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அபுதாபியில் ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்பியவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.