பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, சாதிச்சா நாட்டுக்கு பெருமை.. 'லால் சலாம்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று மாலை 5 மணிக்கு ’லால் சலாம்’ டிரைலர் வெளியாகும் என்றும் அதன் பிறகு ஏழு மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இரவு 10 மணிக்கு இந்த ட்ரெய்லர் வெளியானது. ’லால் சலாம்’ ட்ரைலர் வெளியான ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியான ஆவேசமான வசனங்கள், ரஜினியின் மாஸ் காட்சிகள், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் மோதல் காட்சிகள், செந்திலின் உருக வைக்கும் நடிப்பு என இந்த இரண்டு நிமிட டிரைலரில் பல்வேறு சிறப்பான காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ட்ரெய்லரில் உள்ள மாஸ் வசனங்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. மத நல்லிணக்கத்தை, குடும்ப ஒற்றுமையை, சமூக ஒற்றுமையை பேணும் வகையில் வசனங்கள் இந்த படத்தில் உள்ளது. இந்த டிரைலரில் இடம் பெற்ற சில வசனங்கள் இதோ
உன் பையன் திரும்பி இந்த ஊரே திரும்பி பாக்குற மாதிரி வருவான், இது அந்த ஆத்தா மேல சத்தியம்.
கூட்டம் சேக்கறதை விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன், இனிமேல் அவனை உயிரோடு விடக்கூடாது, போட்டுத் தள்ளு..
பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, பையன் சாதிச்சா நாட்டுக்கு பெருமை, இவன் நாட்டுக்கே பெருமை தேடி கொடுப்பான்.
திருவிழா அன்னிக்கு மட்டும் தான் என் பையன், என் பேரப்பிள்ளை எல்லாரும் என் கூட இருப்பாங்க, நான் வருஷம் முழுவதும் வாழ்றது, இந்த 2 நாளுக்காக தான்.
எந்த ஒரு சாமியா இருந்தாலும், யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும், சாமி சாமி தான்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்ட போட்டுக்கிட்டு அல்லாஹு அக்பர்னு 5 நேரம் நமாஸ் பண்ணிக்கிட்டு அமைதி சமாதானம் பேசிட்டு இருக்குற ஆளுன்னு நினைச்சியா, பம்பாய்ல பாய் ஆளே வேறடா.
மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்தை அதுக்கு மேல வை, அதான் நம்ம நாட்டோட அடையாளம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments