கடல் மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் இருந்து சூரிய உதயம்.. ரம்யா பாண்டியனின் க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கும் வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் அருகே உள்ள பகுதி கொளுக்குமலை. இது உலகின் மிக உயரமான தேயிலை தோட்டங்களின் தாயகமாக உள்ளது என்பதும் இங்கு விளையும் தேயிலை மிகவும் சுவையாக மற்றும் புத்துணர்ச்சியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மூணாறு அருகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த கொளுக்குமலை மிகப்பெரிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது என்பதும் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் இந்த சுற்றுலா தளத்திற்கு ஏராளமானோர் தினந்தோறும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரடுமுரடான சாலைகளின் வழியே இந்த கிராமத்தின் உச்சிக்கு ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும் என்பதும் மூணாறு நகரத்திலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இந்த பகுதிக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த அழகான இயற்கை எழில் கொஞ்சம் இடத்திற்கு நடிகை ரம்யா பாண்டியன் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து அவர் சுமார் 8000 அடி உயரத்திலிருந்து சூரிய உதயத்தை பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.