சென்னையில் சன்னிலியோன்: ரசிகர்கள் குஷி

  • IndiaGlitz, [Wednesday,December 19 2018]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் தற்போது 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சன்னிலியோன் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடன் பாலிவுட் பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சன்னிலியோனின் சென்னை வருகையால் அவரது ரசிகர்கள் குஷியாக இருப்பது, அவர்கள் பதிவு செய்து வரும் டுவீட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.