பெட்ரோல் விலை ரூ.100 குறித்து சன்னிலியோனின் டுவிட்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்டது என்பதும் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் திண்டாட்டமாக உள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலை உயர்வால் கூடுதல் செலவு ஏற்படுகிறது என்பதும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறித்து ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது சன்னி லியோன் இதுகுறித்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’இது ரூபாய் 100ஐ தாண்டினால் உடல்நலனை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம், அனைவரும் சைக்கிளுக்கு மாறுவது நலம்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் சைக்கிளுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.