நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரைப்படங்களிலும் தமிழில் 'வீரமாதேவி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

மேலும் சன்னிலியோனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவருடன் திருமணம் நடந்தது என்பதும் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சன்னிலியோன் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நீங்கள் இதை எதிர்பார்க்கிறீர்களா அல்லது இல்லையா? என்பது எனக்குத் தெரியாது ஆனால் நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன். ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த டுவீட் அவருடைய ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. கணவர் டேனியலுடன் சுமூகமான உறவில் இருக்கும் சன்னிலியோன் இன்னொரு திருமணம் ஏன் செய்து கொள்ள போகிறார்? ஒருவேளை திரைப்படத்தில் நடிக்கும் கேரக்டர் குறித்து கூறுகின்றாரா? என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். இதற்கு அவரே மீண்டும் சரியான விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த புதிர் விடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்?

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் வருகை தருகிறார் என்பதும், இன்று நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே.

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் கமல் கையிலெடுக்கும் முக்கிய பிரச்சனை

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' 'என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்: கமல்ஹாசனின் அதிரடி திட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

இது எந்திரன் டைப் படமல்ல: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றவுடன் கோலிவுட்டில் பலர் ஆச்சரியப்பட்டனர்.