உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன்: சன்னிலியோன் குறிப்பிட்டது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீரில் ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் குஜராத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சி மேல் அளித்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளை உயிரை கொடுத்து காப்பாற்றியாக வேண்டிய சூழல் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கின்றார் என்பது தெரிந்ததே. அந்த குழந்தையின் பாதுகாப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உன்னை பாதுகாக்க என் உயிர் தேவைப்பட்டால் அதையும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: உன்னை இந்த உலகில் உள்ள தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி தருகிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் எனக்கு சம்மதமே.
என்ன விலை கொடுத்தேனும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் பெற்றோர்களே' என்று சன்னிலியோன் கூறியுள்ளார். இந்த ஒரே ஒரு டுவீட் அவர் மீதான மதிப்பை பலமடங்கு பெருக காரணமாக உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments