சன்னிலியோன் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: படப்பிடிப்பு இன்று தொடக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
சதீஷ் மற்றும் சஞ்சனா முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ள படத்தை யுவன் என்பவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில்தான் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் அதாவது ராணி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த படம் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட திகில் படம் என்றும் வரலாற்று கதையம்சம் கொண்ட பகுதியில் சன்னி லியோன் ராணியாக நடிக்க இருப்பதாகவும் ஆயிரம் வருடங்களுக்கு முன் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ராணியின் கேரக்டர்தான் சன்னிலியோனுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பூஜையில் சதீஷ், இயக்குனர் யுவன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சன்னிலியோன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to be associated in this periodic horror comedy with @SunnyLeone ??
— Sathish (@actorsathish) April 19, 2021
Dir #Yuvan @javeddriaz @RameshThilak53 @RameshBaarathi @DoneChannel1 @deepakdmenon Shoot starts from today. God and Cinema fans bless us ???????????? pic.twitter.com/eYlStQ6C3L
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com