சன்னி லியோனின் முதல் தமிழ் படம்....! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்....!

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நடிக்கும், முதல் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

பாலிவுட் சினிமா மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார். முதன் முதலாக தமிழில் வடகறி’ திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தற்போது இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் யுவன் படங்களில், துணை கதாபாத்திரங்களில்நடித்து வருகிறார்.



இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் உருவாக்கி வரும் 5 மொழி திரைப்படமான, ஷீரோ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில், சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் உள்ள இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் சன்னி அமெரிக்காவில் வாழ்ந்து வரும், இந்திய வம்சாவளிப் பெண்ணாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டும் பார்வையுடன், வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் சன்னி லியோன். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை காண ஆர்வமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.