நான் அவற்றை படிப்பதே இல்லை: 'ஓ மை கோஸ்ட்' விழாவில் சன்னிலியோன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சன்னி லியோன் இரண்டு முக்கிய வேடத்தில் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவிற்காக சன்னி லியோன் சென்னை வந்திருந்தார். இந்த விழாவில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில் ‘என்னை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை நான் படிப்பதே இல்லை என்றும், நான் ஏன் அதை படிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படம் நாளை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த சன்னி லியோன் இந்த படத்தில்தான் இளவரசி மற்றும் பேய் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும், இளவரசி வேடத்தில் நடிக்கும்போது பல கிலோ எடையுள்ள உடைகளை அணிந்து நடிப்பது சிரமமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் பேயாக நடிக்கும் போது எனக்கு எந்தவிதமான சிரமும் இல்லை என்றும் ஆனால் எனது மேக்கப் மேனுக்கு தான் அதிக சிரமம் இருந்தது என்று தெரிவித்துள்ளார். பேய் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் பேய் ஏன் மனிதனுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற கேள்வி மட்டும் எனக்குள் உண்டு என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
மேலும் நெகட்டிவ் விமர்சனம் குறித்து நான் கண்டு கொள்வதே இல்லை, அவற்றை புறந்தள்ளி விடுவேன், நான் அவற்றை படிக்கவே மாட்டேன், என்னை பற்றிய பாசிட்டிவ் பதிவுகளை மட்டுமே என்னை சுற்றி இருப்பவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், ‘என்னுடைய அன்றாட பணி என்ன என்று தெரியாதவர்கள், என்னைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள், நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைக்கும் போது அவற்றை நான் ஏன் கவனிக்க வேண்டும்? முகம் தெரியாத அந்த நபர்களை நபர்கள் பற்றி எனக்கு எந்தவித கவலையும் இல்லை’ என்றும் சன்னிலியோன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments