முதல் படத்திலேயே நயன்தாரா சம்பளத்தை நெருங்கிய சன்னிலியோன்

  • IndiaGlitz, [Saturday,December 16 2017]

இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படம் ஒரு சரித்திர படம் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் தமிழ் உள்பட நான்கு மொழிகளில் உருவாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சன்னிலியோன் கேட்ட சம்பளம் ரூ.2.5 கோடி மற்றும் அதற்குரிய வரிகள் என்று கூறப்படுகிறது. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தவிர இன்னும் யாரும் இவ்வளவு பெரிய சம்பளத்தை எட்டாத நிலையில் முதல் படத்திற்கே சன்னிலியோன் கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம்.

இருப்பினும் சன்னிலியோனின் மார்க்கெட், மற்றும் நான்கு மொழி படங்களுக்கும் சேர்த்து இந்த சம்பளம் என்ற நிலையில் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த படத்திற்காக சன்னிலியோன் குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இவ்வளவு பெரிய சம்பளத்தை அவருக்கு கொடுக்கலாம் என தயாரிப்பாளர் வட்டாரங்கள் கூறுகின்றன.