தீபிகாவை அடுத்து சன்னிலியோனுக்கு ஆதரவு குவியுமா?

சமீபத்தில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதற்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தாலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் இணையதள பயனாளிகள் தீபிகாவுக்கு ஆதரவு கொடுத்தனர்.

மேலும் அவர் நடித்த ’சப்பக்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை அனைவரும் பார்க்க போவதாக பலர் இணையதளத்தில் தெரிவித்து வந்தனர். இந்தி மொழியே பிடிக்காத ஒரு சில அரசியல்வாதிகள் கூட இந்த படத்தை தீபிகாவுக்காக பார்க்க போவதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து நடிகை சன்னி லியோன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனக்கு எப்போதும் வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும் இந்த விஷயத்தில் வன்முறை இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர்களை அச்சப்பட வைத்துள்ளதாகவும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு குறித்த மிகப் பெரிய பயம் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பிரச்சினையை வன்முறை இல்லாமல் தீர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சன்னிலியோன் கேட்டுக் கொண்டுள்ளார். சன்னிலியோன் ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக ஆதரவு அளித்ததை அடுத்து, சன்னிலியோனின் அடுத்த படத்தையும் நெட்டிசன்கள் வெற்றி பெற வைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.