அரசு இணையதளத்தில் நடிகையின் ஆபாச படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கனடாவில் ஆபாச படங்களில் நடித்து பின்னர் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக உள்ள சன்னிலியோன் குறித்து அவ்வபோது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருவதுண்டு. ஒருசில அரசியல் தலைவர்களும், சில அமைப்புகளும் சன்னிலியோன் நடித்த படங்கள் வெளிவரும்போதெல்லாம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது உண்டு.
இந்நிலையில் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் சன்னிலியோனின் ஆபாச படங்கள் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பக்கத்தில் பல ஆபாச இணையதளங்களின் லிங்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த இணையதளம் சரிசெய்யப்பட்டுவிட்டாலும் இந்த வேலையை செய்தது யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இது ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது அலுவலக ஊழியர்களின் வேலையா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com