சன்னிலியோனின் முதல் தமிழ் படத்தின் டைட்டிலை தெரிந்து கொள்ள வேண்டுமா?

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முக்கிய வேடத்தில் நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக  சன்னிலியோன், குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது படக்குழுவினர்களால் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த படத்தின் டைட்டிலை தெரிந்து கொள்ள சன்னிலியோன் ரசிகர்கள் வரும் 27ஆம் தேதி வரை காத்திருக்கவும்