பிக்பாஸ் ஓடிடி சீசனில் மியா கலிஃபா, சன்னி லியோன்? ஹாட் பீட்டை எகிற வைக்கும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியில் ஒளிப்பரப்பாகவுள்ள பிக்பாஸ் ஓடிடி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல் அவ்வபோது ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் முன்னாள் ஆபாச பட நடிகைகளான மியா கலிஃபா மற்றும் சன்னி லியோனின் பெயர்கள் இதில் அடிபட்ட நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்தது. இதையடுத்து 24 மணிநேரமும் நேரடி ஒளிப்பரப்பு முறையில் ஓடிடி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியில் பிக்பாஸ் ஓடிடி சீசன் 1 நிகழ்ச்சியை தயாரிப்பாளரும் ரியாலிட்டி ஷோ பிரபலமுமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். அதில் திவ்யா அகர்வால் வெற்றிப்பெற்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பாலிவுட் நடிகர் சல்மான் தற்போது ஓடிடி 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆபாச பட நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவிலும் ஒருசில தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நடிகை சன்னிலியோன் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை சன்னிலியோன் இது என் கெரியரில் திருப்பு முனையாக இருக்கும் என்றும் நிகழ்ச்சியுடன் ஒன்றி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல தயாராகிவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகை சன்னிலியோன் பிக்பாஸ் ஓடிடி சீசன் 2 நிகழ்ச்சியில் இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக இருப்பாரா? அல்லது போட்டியின் இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவாரா? என்பதுபோன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதைப்போல பிக்பாஸ் ஓடிடி சீசன் 2 நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆபாச பட நடிகையாக இருந்து தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்த நபராக இருந்துவரும் மியா கலிஃபாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலைத் தொடர்ந்து அவர் போட்டியில் பங்குகொள்வது குறித்த வேறெந்த தகவலும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பாக இருக்கிற இந்த பிக்பாஸ் ஓடிடி சீசன் 2 நிகழ்ச்சி வரும் ஜுலை 17 ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
மேலும் அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக் நாஸ், ஜியா சங்கர், மனிஷா ராணி, பாலக் பர்ஸ்வானி போன்ற பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக இந்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments