படுக்கையறையில் சன்னிலியோன் உதட்டில் காயம்.. யார் காரணம்? வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக சன்னிலியோன் படுக்கை அறையில் எடுத்த செல்ஃபி வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் என்பதும் அவர் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோனுக்கு 54 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுக்கு மில்லியன் கணக்கான லைக்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது படுக்கை அறையில் படுத்து கொண்டு செல்பி வீடியோ ஒன்றை எடுத்து பதிவு செய்துள்ளார். அதில் உதட்டில் காயம் ஏற்பட்டுவிட்டது என்றும் ஆனால் அந்த காயத்தை கண்டு கொள்ளாமல் தனது கணவர் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காயம் குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் மொபைல் போனை செல்பி எடுக்க மேலே தூக்கி பிடிக்கும் போது அது நழுவி முகத்தில் விழுந்துவிட்டது என்றும் அது உதட்டில் விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments