ப்ரைடல் உடையில் பாலிவுட் “பேபி டால்“… நெட்டிசன்களை கவர்ந்த வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு காலத்தில் அடல்ட் நட்சத்திரமாக அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து இருக்கிறார். அதோடு திரைப்படங்கள் மட்டுமல்லாது முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டியாளர், தொகுப்பாளர் எனப் பல்வேறு அவதாரங்களில் இளைஞர்களை கவர்ந்ததோடு, தற்போது பொது மக்களையும் ஈர்க்கும் வகையில் தனது ஒட்டுமொத்த அடையாளத்தையும் மாற்றிக் காட்டி இருக்கிறார்.
மேலும் கணவர், 3 குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட இவரது வாழ்க்கை திரைத்துறையில் தற்போது பாராட்டும் வகையில் அமைந்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்களால் “பேபி டால்“ என அன்போடு அழைக்கப்பட்டு வரும் இவர், தற்போது முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் Splitsvilla எனும் நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தோடு கேரளாவில் தங்கி இருக்கிறார்.
மேலும் அங்கு விதவிதமான போட்டோ ஷுட்டை நடத்தி அதை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை ப்ரைடல் உடை அணிந்து நடத்திய போட்டோ ஷுட் நெட்டிசனகள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
ஒரு காலத்தில் அடல்ட் படத்தில் நடித்தற்காக இந்தியாவை விட்டு போகவேண்டும் என மிரட்டப்பட்ட சன்னி லியோன் தனது திறமையான நடிப்பு மற்றும் பேச்சாற்றல் மூலம் தற்போது திரைத் துறையில் முன்னணி இடத்தை வகித்து வருகிறார். இவர் தமிழில் “வடகறி“ என்ற படத்திலும் அதோடு “வீரமாதேவி“ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பாலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் நடிகை சன்னி லியோனின் இன்ஸ்டா புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அவர் தற்போது வெள்ளை ப்ரைடல் உடை அணிந்து வெளியிட்டு உள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் பாராட்டை பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments