கமல் - ஷங்கரின் 'இந்தியன் 2' படத்திற்கு போட்டியா?  சன்னி லியோன் ட்வீட்டால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாளில் சன்னி லியோன் நடித்த அதிரடி ஆக்சன் படம் ஒன்று வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று இந்த படத்திற்காக புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த ’கொட்டேஷன் கேங்’ என்ற திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்த பதிவை சன்னி லியோன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜூலை மாதம் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டாலும் சரியான தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் சன்னி லியோன் திரைப்படம் வெளிவருமா? அல்லது ஒரு வாரம் கழித்து வெளியே வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் உட்பட சில தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சன்னி லியோன் கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. ஜாக்கி ஷெரப், சன்னி லியோன், பிரியா மணி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விவேக்குமார் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பிக்பாஸ் அபிஷேக் இரண்டாம் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் யூடியூபர் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மனைவி ராதிகாவுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு எதிரொலி: 'வடக்கன்' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு..!

இயக்குனர் பாரதி சக்தி இயக்கத்தில் உருவாகி இருந்த 'வடக்கன்' என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள்

ஒரே ஒரு வெற்றிப்படம் தான்.. சன்னி லியோன் ரேஞ்சுக்கு குவிந்த கூட்டம்.. சென்னையில் மமிதா பாஜூ..!

மலையாள நடிகை மமிதா பாஜு 'பிரேமலு' என்ற ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் சமீபத்தில் சென்னை வந்த போது அவருக்கு சன்னி லியோன் ரேஞ்சுக்கு அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தது பரபரப்பை

'வேட்டையன்' ரிலீஸ் தேதி.. 'கூலி' படப்பிடிப்பு தேதி.. ஒரே நாளில் இரண்டு அப்டேட்டுகள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்