close
Choose your channels

கமல் - ஷங்கரின் 'இந்தியன் 2' படத்திற்கு போட்டியா?  சன்னி லியோன் ட்வீட்டால் பரபரப்பு..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாளில் சன்னி லியோன் நடித்த அதிரடி ஆக்சன் படம் ஒன்று வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று இந்த படத்திற்காக புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த ’கொட்டேஷன் கேங்’ என்ற திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்த பதிவை சன்னி லியோன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜூலை மாதம் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டாலும் சரியான தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் சன்னி லியோன் திரைப்படம் வெளிவருமா? அல்லது ஒரு வாரம் கழித்து வெளியே வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் உட்பட சில தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சன்னி லியோன் கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. ஜாக்கி ஷெரப், சன்னி லியோன், பிரியா மணி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விவேக்குமார் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment