சன்னிலியோன் செய்த வேறலெவல் சேலஞ்ச்… வைரல் வீடியோ!

நாம் எப்போதும் விளையாட்டுத்தனமாக அதே நேரத்தில் சவாலான சில விஷயங்களை விரும்புகிறோம். அப்படியொரு சேலஞ்சைத்தான் பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் செய்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் Flipping Bottle Challenge பிரபலமாகி வருகிறது. இதை மனிதர்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் செல்லப்பிராணிகளும் செய்து அசத்தி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வலம்வரும் சன்னிலியோன் இந்த சேலஞ்சை செய்துள்ளார். மேலும் உங்களால் செய்ய முடியுமா? என்று தனது ரசிகர்களுக்கும் அவர் சேலஞ்ச் விடுத்திருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பிசியாகத் தொகுத்து வழங்கிவரும் சன்னிலியோன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் யுவன் இயக்கும் “OMG“இயக்குநர் வடிவுரையான் இயக்கிவரும் “வீரமாதேவி“ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இதைத்தவிர மலையாளத்தில் “ரங்கீலா“ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல பாலிவுட்டில் “Anamika“ எனும் திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சன்னிலியோன் Flipping Bottle Challengeஐ அசத்தலாக செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சன்னியை பாராட்டி வருகின்றனர்.