சன்னிலியோன் நடித்திருந்தும் 'ஏ' சான்றிதழில் இருந்து தப்பிய தமிழ் திரைப்படம்!

பொதுவாக சன்னி லியோன் நடித்த பல பாலிவுட் திரைப்படங்களுக்கு சென்சார் அமைப்பு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ் திரைப்படமான ’ ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படம் ‘ஏ’ சான்றிதழில் இருந்து தப்பியுள்ளது.

சன்னி லியோன் இரண்டு கேரக்டர்களில் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு அராஜகமான ராணி வேடத்திலும் பேய் வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வரலாற்று கதையம்சம் மற்றும் நிகழ்கால கதையம்சம் என இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இந்த படத்தை புவன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீஸர் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, தங்கதுரை, ரமேஷ் திலக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியின் 'பாபா'வை அடுத்து ரீரிலீஸாகும் எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் அடுத்ததாக எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அட்லி வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீயின் வீட்டிற்கு திடீரென தளபதி விஜய் விசிட் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரஜினியின் 'லால் சலாம்' படப்பிடிப்பு எங்கே? எப்போது? கசிந்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தை ரஜினியின் மூத்த

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஜனனியின் முதல் பதிவு.. யாரிடம் மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று எலிமினேட் செய்யப்பட்ட ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் முதல் பதிவு செய்துள்ள நிலையில் அதில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்.. இயக்குனர் மிஷ்கின் சொன்னது யாரை?

 பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.