மாலத்தீவையே மயக்கிய நீச்சல் உடை அழகி… நடிகை சன்னி லியோனின் வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும் சிறந்த மாடல் அழகியாகவும் வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் குறித்து ரசிகர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலத்தீவில் தங்கியுள்ள நடிகை சன்னி லியோன் தனது புகைப்படங்களால் இணையத்தை அலறவிட்டு வருகிறார்.
ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன் ஒரு கட்டத்தில் அதைவிட்டு விட்டு பாலிவுட் சினிமாவில் நடிகையானார். கடந்த 2012 இல் ‘ஜிஸ்ம்’ எனும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து தனது திறமையான நடிப்பு மற்றும் சிறப்பான உடை மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
மேலும் பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவான “வடகறி” மற்றும் “வீரமாதேவி”, ”ஓ மை கோஸ்ட்” எனப் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சினிமாவைத் தவிர டிஜிட்டல் உலகில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சன்னிலியோன் தொடர்ந்து தனது மாடலிங் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சிப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை சன்னி லியோன் விதவிதமான நீச்சல் உடைகளை அணிந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் வெண்மணல், நீலக்கடல், நீல வானம், சாயும் சூரியன் என்று அதன் இயற்கை அழகில் சொக்கிப்போய் இருக்கும் நடிகை சன்னிலியோன் தனது விடுமுறை சிறப்பாக கொண்டாடி வருவதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகிய க்ரைம் திரில்லர் திரைப்படமான “கென்னடி” திரைப்படத்தில் இணைந்து நடிகை சன்னி லியோன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட நிலையில் அவரும் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments