'பிக்பாஸ்' ஐஸ்வர்யா தத்தாவின் அடுத்த படத்தில் சன்னிலியோன்: இயக்குனர் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தாலும் பிக்பாஸ் குழுவினரின் ஆதரவால் இவர் இறுதிவரை இந்த போட்டியில் இடம்பெற்று இருந்தார் என்பதும் இந்த நிகழ்ச்சியின் ரன்னர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வந்தார். ஐஸ்வர்யா தத்தா உள்பட 5 நடிகைகள் நடித்து வரும் இந்த திரைப்படம் தற்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ளது என்பதும் மிக விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் விஜய்ஸ்ரீ தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு ஸ்பெஷல் பாடலுக்காக கவர்ச்சி நடிகை சன்னிலியோனை அணுகி இருப்பதாகவும் அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இது குறித்த ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறி உள்ளார். ஏற்கனவே நடிகை சன்னிலியோன் ’வடகறி’ என்ற தமிழ்ப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பதும், ’வீரமாதேவி’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஐஸ்வர்யா தத்தாவின் அடுத்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாருஹாசன் ’தாதா 87’ என்ற திரைப்படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ மீண்டும் சாருஹாசன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#TeamPolladhaulagilbayangaragame will be happy if you @SunnyLeone do a special song in our #Polladhaulagilbayangaragame
— Vijay Sri G (@vijaysrig) August 29, 2020
movie. Let corona make way for a happy moment.
Interesting Talks Happening
Impressive News Soon...#PolladhaulagilbayangaragameTeam#PUBGBABY pic.twitter.com/KCcR9VP73s
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com