சன்னிலியோன் ஆணுறை விளம்பரம். சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய எம்.எல்.ஏ
Send us your feedback to audioarticles@vaarta.com
சன்னிலியோன் நடித்த ஆபாசமான ஆணுறை விளம்பரம் குறித்து கோவா சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சன்னிலியோன் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்தார். இந்த விளம்பரத்தின் ஆபாச ஸ்டில்கள் கோவா மாநிலத்தின் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்ததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்த விளம்பரங்களை போக்குவரத்து துறை நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் கோவா அரசு இதை கண்டுகொள்ளாததால் நேற்று கோவா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரான்சிஸ் சில்வீரா இந்தப் பிரச்னையை கிளப்பினார். அவர் கூறியதாவது: 'கோவா அழகான சுற்றுலா பிரதேசம். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மாதிரியான இடத்தில் இது போன்ற விளம்பரங்களை அரசு பேருந்துகளில் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது` என்று கூறினார்.
எம்.எல்.ஏ பிரான்சிஸ் அவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய கோவா போக்குவரத்து அமைச்சர் சுதின் தவாலிகர் கூறும்போது, அந்த விளம்பரங்களை நீக்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் போக்குவரத்து நிறுவன எம்.டியிடமும் பேசியிருக்கிறேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற விளம்பரங்கள் பேருந்துகளில் இடம்பெறக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கின்றேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments