சென்னை கிரிக்கெட்டில் இணைந்தார் சன்னிலியோன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோனின் ஃபேவரேட் விளையாட்டு கால்பந்து எனினும் அவர் தற்போது சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
Chennai Swaggers என்ற சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி விரைவில் BCL எனப்படும் Box Cricket Leauge தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த டீமுக்கு நடிகை சன்னிலியோன் தற்போது உரிமையாளராகியுள்ளார்.
இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னிலியோன் தனக்கு கால்பந்து, பேஸ்கட்பால் மற்றும் வாலிபால் விளையாடுவதில் விருப்பம் என்றும் கூறினார். மேலும் சன்னிலியோன் கிரிக்கெட் விளையாடி பழக்கம் இல்லை என்றாலும் பேட்டை கையில் வைத்தவாறு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.
மும்பையை சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னை விளையாட்டு அணிகளை வாங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஏற்கனவே அபிஷேக்பச்சன் சென்னையின் FC எனப்படும் கால்பந்து அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com