சென்னை கிரிக்கெட்டில் இணைந்தார் சன்னிலியோன்

  • IndiaGlitz, [Tuesday,February 23 2016]

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோனின் ஃபேவரேட் விளையாட்டு கால்பந்து எனினும் அவர் தற்போது சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளர் ஆகியுள்ளார்.


Chennai Swaggers என்ற சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி விரைவில் BCL எனப்படும் Box Cricket Leauge தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த டீமுக்கு நடிகை சன்னிலியோன் தற்போது உரிமையாளராகியுள்ளார்.

இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னிலியோன் தனக்கு கால்பந்து, பேஸ்கட்பால் மற்றும் வாலிபால் விளையாடுவதில் விருப்பம் என்றும் கூறினார். மேலும் சன்னிலியோன் கிரிக்கெட் விளையாடி பழக்கம் இல்லை என்றாலும் பேட்டை கையில் வைத்தவாறு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

மும்பையை சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னை விளையாட்டு அணிகளை வாங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஏற்கனவே அபிஷேக்பச்சன் சென்னையின் FC எனப்படும் கால்பந்து அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தல் கமிஷனுக்கு நடிகர் சங்கம் வைத்த கோரிக்கை மனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவித்தலைவர் பொன்வண்ணன் தலைமையிலான குழு இன்று தமிழக தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம்மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் உறுதிசெய்தார்...

பீப் பாடலை இயற்றியது ஏன்? போலீஸாரிடம் சிம்பு விளக்கம்

கடந்த டிசம்பர் மாதம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீதும் கோவை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது....

ரஜினியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் 'கபாலி' மற்றும் '2.0'...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரிலீஸ் தேதி

எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே மாறிவிடும் நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்'...