சில முட்டாள்கள் 2000 ரூபாய்க்காக இதை செய்துள்ளனர்: சன்னிலியோன் ஆத்திரம்

சில முட்டாள்கள் 2000 ரூபாய்க்காக என்னுடைய பான் கார்டை பயன்படுத்தி மோசடி செய்து உள்ளார்கள் என கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆத்திரத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 2000 ரூபாய் ஆன்லைனில் கடன் பெற்றுள்ளதாகவும், இதனால் சன்னிலியோனின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து ஆத்திரமாக தனது சமூக வலைத்தளத்தில் சன்னிலியோன் கூறியபோது, ‘சில முட்டாள்கள் என்னுடைய பான் கார்டு எண்ணை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்கள். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் சில மணி நேரம் கழித்து தனது பிரச்சனை சரியாகி விட்டதாகவும், தன்னுடைய பிரச்சனையை தீர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் பதிவு செய்து தனது முந்தைய டுவிட்டை சன்னிலியோன் டெலிட் செய்துள்ளார்.