காமசூத்ராவின் அடுத்த பாகத்தில் சன்னிலியோன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1996ஆம் ஆண்டு மீரா நாயர் இயக்கத்தில் ரேகா நடித்த ‘காமசூத்ரா’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் கோல்டன் சீஷெல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு, கேன்ஸ் பட விழாவிலும் திரையிடப்பட்டது. ஆனால் இந்த படம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டது
இந்த நிலையில் காமசூத்ராவின் அடுத்த பாகம் விரைவில் உருவாகவிருப்பதாகவும் ஆனால் இது திரைப்படமாக உருவாகாமல் வெப் சீரீஸாக உருவாகவிருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் சன்னிலியோன் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரீஸை ஏக்தா கபூர் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சன்னிலியோன் நடித்த ‘ராகினி எம்.எம்.எஸ்’ என்ற படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
ராஜஸ்தானில் அந்தக் காலத்து ராஜாக்களுக்கு பாலியல் அடிமைகளாக இருந்த தேவதாசி பெண்களான கோலி சமூகப் பெண்கள் குறித்த கதைதான் இந்த வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அடல்ட் படங்களில் நடித்த சன்னிலியோன், இந்த படத்தில் நடிக்கவிருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout