மீண்டும் தென்னிந்திய படத்தில் சன்னிலியோன்: என்ன கேரக்டர் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,August 10 2022]
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழில் ’வீரமாதேவி’ மற்றும் ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ’சாம்பியன்’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் தெலுங்கில் உருவாகி வரும் ’ஜின்னா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் சன்னி லியோன் ’ரேணுகா’ என்ற கேரக்டரில் நடிப்பதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் சன்னிலியோன் கேரக்டர் குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தை, தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
So excited to introduce to you - #Renuka!
— Sunny Leone (@SunnyLeone) August 10, 2022
I am #Ginna 's childhood buddy but that doesn't mean I won't turn his life upside down ??!! It's going to be a crazy journey full of unexpected twists and turns ??#SunnyLeone #GinnaRenuka @iVishnuManchu pic.twitter.com/R8uWcemweW