நான் தமிழ் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா? சன்னிலியோன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், பாலிவுட் படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட ஒருசில தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தமிழ் உள்பட அதிக தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புவதாகவும், தென்னிந்திய படங்களில் நடிப்பது புதுவித அனுபவத்தை தருவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவை தான் மிகவும் விரும்புவதாகவும் குறிப்பாக பாண்டிச்சேரி தனக்கு மிகவும் இடம் என்றும் கூறிய அவர் தென்னிந்திய உணவுகளும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்ப் படங்களில் நடிக்க தனக்கு விருப்பம்தான் என்றும் ஆனால் தமிழ் மொழியை பேசுவதிலும், புரிந்து கொள்வதிலும் தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், பலர் தனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் தான் பேசும் தமிழ் பிறரை சிரிக்க வைக்கவே உதவுவதாகவும் கூறியுள்ளார்.
'வடகறி' படத்தை அடுத்து சன்னி வேறு படங்களில் நடிக்கவில்லை எனினும் விரைவில் தமிழ்ப் படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout