பாலிவுட்டில் நுழைய அட்ஜெஸ்ட் செய்தது உண்மைதான். சன்னிலியோன்

  • IndiaGlitz, [Friday,December 02 2016]

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆப் ஒன்றை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அந்த ஆப்-இல் சன்னிலியோன் தன்னுடைய அனுபவத்தை கூறி வருகிறார்.
கடும் போட்டியாக உள்ளஃ பாலிவுட்டில் நுழைந்தது குறித்த அனுபவத்தை அவர் கூறும்போது, 'பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய புதிதில் பாலிவுட் திரையுலகும் இயங்கும் விதம். சினிமாத் தொழில் நடக்கும் விதம் ஆகியவை எனக்கு புதிதாக இருந்தது. என் சிந்தனைப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய அளவு அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டியிருந்தது. ' என்று கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் பாலிவுட் மாற வாய்ப்பில்லை என்றாலும் அமெரிக்காவை ஒப்பிடும்போது இந்தியா எனக்கு ரொம்ப பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.