இந்த கேம் மேலேயே எனக்கு ஒரு கேள்வி இருக்கு.. சுனிதாவின் கருத்தை பிக்பாஸ் பரிசீலிப்பாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டு அணிகளாக பிரித்து விளையாடி வருகிறார்கள் என்பதையும், டாஸ்க்கிலும் இரண்டு அணிகள் ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பிசிக்கல் டாஸ்க் என்று வரும் போது, ஆண்கள் அணி வலிமையாக இருப்பதால் அவர்கள் எளிதில் வெற்றி பெறுவதை சுனிதா சுட்டிக்காட்டுகிறார். “எதற்காக ஆண்கள் குத்துச்சண்டை மற்றும் பெண்கள் குத்துச்சண்டை என தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்? இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருவரும் எல்லா விதத்திலும் சமம் தான். ஆனால் சில இடங்களில் ஆண்கள் வேறு, பெண்கள் வேறு. அப்படி என்றால், ஆண்-பெண் கலந்து குத்துச்சண்டை போட்டி வைத்திருக்கலாமே. ஏன் தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்? இதை நான் டாஸ்குகளில் மட்டும் சொல்லவில்லை, இந்த கேம் மேலேயே எனக்கு தான் என்று கேட்கிறார்.
இந்த பிசிக்கல் டாஸ்கில் நான் ஒரே ஒருமுறை மட்டுமே என்னுடைய எனர்ஜியை கொண்டு முழு திறனுடன் விளையாடினேன். அதற்குப் பிறகு என்னால் முடியவில்லை," என்று கூறுகிறார். அவருடைய கருத்தை அன்சிதா, ஜாக்குலின் உள்பட எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசிக்கல் டாஸ்க் வரும் போது, ஆண்கள் அணியினர், தங்களுடைய வலிமையால் பெண்கள் அணியை எளிதில் வெற்றி பெறுவதால், மூளையை பயன்படுத்தி விளையாடும் வகையில் மட்டும் டாஸ்க்குகளை அமைக்க வேண்டும் என்று பார்வையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுனிதாவின் இந்த கருத்தை பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டு, இனிவரும் டாஸ்க்குகளில் மாற்றம் ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Sunita is Speaking Correctly but Actually #BiggBoss Team Also Responsible For This Unfair Game 👌
— Dᴀᴠɪᴅ Aᴅᴀᴍ CVF (@David_AdamCVF) October 22, 2024
BOYS VS GIRLS Was An Failed Concept 💯#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BiggBossTamil
pic.twitter.com/TrZMLOVWei
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments