ஆபாசமாக பேசிய நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்த சுனிதா!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சுனிதா ஆபாசமாக பேசிய நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சுனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுனிதாவின் இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமீபத்தில் சுனிதா நெட்டிசன்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் ஆபாசமான முறையில் சுனிதாவை பிகினி உடையை திறந்து காண்பியுங்கள் என்று கூறியுள்ளார். ஆபாசமாக பேசிய அந்த நபரின் புரொபைலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ஸ்டோரியில் பதிவு செய்த சுனிதா, ‘நீ ஒரு கோழை’ என கடுமையாக திட்டியுள்ளார்.

சுனிதாவின் இந்த ரியாக்சனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்ததுடன் அந்த நெட்டிசனை கமெண்ட்டில் வச்சு செய்து வருகின்றனர்.