அந்த 35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதாவின் முதல் பதிவு.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் தனது 35 நாட்கள் அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் சுனிதா செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஏற்கனவே ரவீந்திர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறிய நிலையில், நேற்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற சுனிதா வெளியேறினார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கண்ணீர் மல்க வெளியேறிய போது, விஜய் சேதுபதி அவரது மலரும் நினைவுகள் குறித்த வீடியோவை வெளியிடச் சொன்னபோது, அந்த வீடியோவை சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், "35 நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டது என்றும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடனாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டின் அனைத்து நிகழ்வுகளும், அனைத்து பிணைப்புகளும், அனைத்து பாடங்களும் இதோ உங்களுக்காக எனக்கூறி அந்த வீடியோ குறித்து சுனிதா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com