மைனா நந்தினி கணவருக்கு ஜோடியாகும் சுனிதா: புதிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,October 11 2022]

விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் நடிக்கும் திரைப்படத்தில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சுனிதா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் என்பவர் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக சுனிதா நடிக்க உள்ளார். இவர் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு கலக்கியவர் என்பதும், அது மட்டுமின்றி விஜய் டிவியின் பல டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான யோகேஷ் மற்றும் சுனிதாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.