நீங்க போறது நல்லது கிடையாது: சுனிதா செய்த நோஸ்கட் .. ஜாக்குலின் கண்ணீர்..!
- IndiaGlitz, [Tuesday,October 08 2024]
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்றைய முதல் புரமோ வெளியாகி உள்ள நிலையில், இந்த புரமோவில் ஒரு புது விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக இருக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில், ஆண்கள் தங்கள் வீட்டில் இருந்து உங்களுக்காக விளையாட ஒரு நபரை பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் உங்களுக்காக விளையாட ஒரு நபரை ஆண்கள் வீட்டிற்கும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.
இதனை அடுத்து ஆண்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரை அனுப்பலாம் என்று ஆலோசனை செய்யும் நிலையில், அனேகமாக அங்கிருந்து ஜாக்லின் தான் வருவார் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெண்கள் வீட்டில் சில வாக்குவாதங்கள் நடக்கின்றன. என்னை அனுப்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் என்று ஜாக்குலின் கூற சுனிதா, ’நீங்கள் பெட்டில் படுக்குறீர்களா? வெளியில் படுக்குறீர்களா? என்பது விஷயம் இல்லை. இந்த டீம்க்கு என்ன நல்லது என்றால், நீங்கள் போறது நல்லது இல்லை என்று நோஸ்கட் செய்ய, ஜாக்குலின் உடனே தனிமையில் உட்கார்ந்து அழும் காட்சிகளுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
ஜாக்குலின் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிகம் பேசுகிறார் என்றும், கண்டெண்ட் கொடுப்பதற்காக வேண்டுமென்றே அதிகம் பேசுகிறார், சில செயல்களை செய்கிறார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த அழுகையும் கூட நீலிக் கண்ணீரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Day2 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 8, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/l5bvafE4NH