சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிற நிலையில் இன்னும் விறுவிறுப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில் சண்டை கோழியாக ஜாக்குலின் மாறியுள்ள நிலையில், அவரது நிலை குறித்து ஏற்கனவே பார்வையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜாக்குலினை கொஞ்சம் கூட பிடிக்காத சுனிதாவும் அவரைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.

அன்சிதாவிடம் சுனிதா கூறியபோது, ‘எனக்கு ஜாக்லின் ஏன் செட் ஆகவில்லை என்றால், எல்லாவற்றுக்கும் சண்டை போடும் விதத்தில் பேசக்கூடாது என்று சொல்ல அதற்கு அன்ஷிதா ‘அது சண்டை அல்ல, ட்ரிக்கர் செய்வது என்று கூறுகிறார். மேலும் , சண்டை பண்ணாதான் மக்கள் லவ் பண்ணுவாங்க என்று ஜாக்குலின் நினைக்கிறாரோ’ என்று கூற, உண்மையாகவே நீ என்ன செய்கிறாயோ, அதுதான் மக்களுக்கு விருப்பமாக இருக்கும். ஜாக்குலின் பேசும் விதமே சரியில்லை. அது சண்டை போடுற மாதிரியே இருக்குது என்று சுனிதா கூறுகிறார்.

மேலும் சண்டை போடுவது என்பது ஜாக்குலின் இயல்பு, அதனால் அவரிடம் இருந்து தூரமாக இருந்து கொள்வது நல்லது, எனக்கு அவர் செட் ஆக மாட்டார் என்று சுனிதா கூறுவதுடன், இன்றைய மூன்றாவது புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

More News

குழந்தை பாக்கியம் தரும் சக்தி வாய்ந்த பரிகாரம்.! ஸ்ரீ சக்கரத்தின் ரகசியம்.! :பாலாறு சுவாமிகள்

பிரபல ஆன்மீக ஜோதிடர் பாலாறு சுவாமிகள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பரிகாரங்கள், ஸ்ரீ சக்கரம், குழந்தை பாக்கியம், உணவு மற்றும் கொடிமரம்

'வேட்டையன்' FDFS பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு

ஏன்டா எங்க செல்லத்தை டென்ஷன் ஆக்குறீங்க.. பிக்பாஸ் செளந்தர்யா ஆர்மி ஆவேசம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சௌந்தர்யா தான் வெளியேறுவார் என்று சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அனைத்து போட்டிகளையும்

தசரா பண்டிகை கொண்டாட்டம்.. 'வேதா' திரைப்படத்தை பிரீமியர் செய்கிறது ZEE5..!

நிகில் அத்வானி இயக்கத்தில்,  ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள 'வேதா, சம்விதன் கா ரக்ஷக்' படத்தில், ஜான் ஆபிரகாம்,

ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. ஹீரோ யார் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில், அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.