இது முட்டாள் செய்யும்வேலை… போட்டியின்போதே இளம்வீரரை வறுத்தெடுத்த காவஸ்கர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தூக்கியடிக்க முயன்று படுமோசமாக அவுட்டானார். இந்த விக்கெட்டை கமெண்ட்ரி செய்துகொண்டிருந்த கவாஸ்கர் போட்டியின்போதே இது முட்டாள் செய்யும்வேலை என விமர்சித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஜோகனஸ்பர்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் 229 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து இந்திய வீரர்கள் 2 ஆவது இன்னிங்ஸை ஆடத்துவங்கினர்.
இதில் முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் போன்ற முன்னணி வீரர்கள் சொதப்பியதை அடுத்து ரஹானேவும் புஜாராவும் நிதானமாக விளையாடி தலா அரைச்சதத்தை அடித்தனர். தொடர்ந்து வந்த ஹனுமான் விஹாரி 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க தற்போது ரிஷப் பண்ட் மட்டுமே முக்கிய பேட்ஸ்மேனாகக் கருதப்பட்டார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் 3ஆவது பந்திலேயே தூக்கியடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் ரசிகர்கள் முதற்கொண்டு ஒட்டுமொத்த வீரர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவத்தால் கடும் கோபமடைந்த கவாஸ்கர் தனது கமெண்ட்ரியிலேயே ரிஷப் பண்டை மோசமாக விமர்சிக்கத் துவங்கிவிட்டார். மேலும் இது அவருடைய இயற்கையான ஆட்டம் எனக் கூறுவது சுத்த முட்டாள்தனம். முட்டாள் செய்யும் வேலை இது. பொறுப்பே இல்லாமல் தூக்கி அடிக்க முயன்று அவுட்டாகியுள்ளார். இதனை அவர் தனது இயற்கையான ஆட்டம் எனக் கூறிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது
ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் பொறுப்பினைத் தோள்களில் சுமந்து விளையாடியுள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பின்னர் வரும் வீரர்களும் இருந்திருக்க வேண்டும். இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் கூட ரிஷப் பண்ட்-டிடம் இந்த பிரச்சனையைத்தான் எழுப்புவார்கள் என நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா இதுவரை 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதனால் முன்னிலை வகித்துவரும் தென்னாப்பிரிக்காவை இந்திய வீரர்கள் தோற்கடிப்பார்களா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments