தல தோனியிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கிய மற்றொரு லெஜெண்ட்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நேற்று கொல்கத்தா அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையிலான லீக் போட்டி பரபரப்பாக நடைபெற்ற நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. ஆனாலும் இந்தத் தோல்விக்கு மத்தியில் ரசிகர்களின் மனதைக் கவரும் வகையிலான மற்றொரு நிகழ்வு அரங்கேறி அதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரைக்கும் முடிசூடாக மன்னனாக திகழ்பவர் எம்.எஸ்.தோனிதான். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றிப்பெற்றிருந்தால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்க முடியும். இதனால் போட்டியின் துவக்கத்தில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து விளையாடிய கொல்கத்தா ரைடர்ஸ் அணியினர் 147 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து பேசிய கேப்டன் தோனி டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை தேர்வுசெய்தோம். ஆனால் முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. பனிப்பொழிவு காரணமாக 180 ரன்களையாவது எடுக்க வேண்டும் என்று. ஆனால் அதுமுடியாமல் போனதால் தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது என்று விளக்கம் அளிந்திருந்தார்.
இத்தகைய விளக்கத்திற்கு இடையில் நேற்றைய போட்டியின்போது 90 ஸ் கிட்ஸ்களிடையே கிரிக்கெட் லெஜெண்டாக கருதப்படும் சுனில் கவாஸ்கர் எம்.எஸ்.தோனி அருகே சென்று அவருடைய ஆட்டோகிராஃபை கேட்டார். இதற்கு புன்னகை முகத்துடன் தோனியும் தனது ஆட்டோகிராஃபை சுனில் கவாஸ்கரின் டிசர்டில் பதித்தார்.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து கருத்துப் பதிவிட்ட ரசிகர்கள் 2011 இல் உலகக்கோப்பை வென்ற தோனியுடன் 1983 உலகக்கோப்பை நாயகன் சுனில்கவாஸ்கர் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார் என்று பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
MS Dhoni and #CSK thank Chepauk for its unconditional support this year too. Meanwhile, we have a 71 year old legend who has over 10k test runs, getting an autograph of a 41 year old legend .@msdhoni
Not a CSK fan, but definitely an MSDian. #MSDhoni #Chepauk #mahi #CSKvsKKR pic.twitter.com/2fmhHvcq5y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com